
தூத்துக்குடி முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் வழிகாட்டுதலின்படியும், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆணையின்படியும், கலெக்டா், இணை இயக்குனர்கள் ஆலோசனையின்படியும், செங்கல்பட்டு மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மா தலைமையில் செங்கல்பட்டு சி.எஸ்.ஐ. அலிசன் காசி மேல்நிலைப்பள்ளியில் விழா நடைபெற்றது. விழாவில் செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், பள்ளித்துணை ஆய்வாளர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பெருமக்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், அமைப்புக்குழு உறுப்பினர்களான காரணைப் புதுச்சேரி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், காரணைப்புதுச்சேரி பள்ளி மேலாண்மைக் குழுத்ததலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஆகியோர் பங்குபெற்றனா். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அலுவலர் பெருமக்களுக்கும் நடுவர்களாக பணியாற்றியவர்களுக்கும் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் அனைவரையும் வரவேற்று, ஒருங்கிணைத்து சிறார் திரைப்படப் போட்டிகளை நடத்தினார். முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு நலத்திட்டங்களைக் குறித்தும், வெற்றி பெறும் மாணாக்கர்கள் வெளிநாட்டு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவர் என்பது குறித்து விளக்கவுரையாற்றினார். செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர் ஆகியோர் அனைவரும் மாணவர்களுக்கு போட்டிகள் சார்ந்த நல் அறிவுரைகளை வழங்கிப் பாராட்டி வாழ்த்தினர். சிறார் திரைப்பட மன்றம் சார் போட்டிகள் நடிப்பு, கதை வசனம், ஒளிப்பதிவு ஆகிய தலைப்பின் கீழ் 6&7, 8 , 9 வகுப்பு ஆகிய மூன்று வகையிலான போட்டிகளில் 8 வட்டாரங்களில் இருந்து மொத்தம் 72 மாணாக்கர் நடிப்பவர்களாகவும் , உடன் நடிப்பவர்களாக 210 மாணவர்களும் ஆக மொத்தம் 300 மாணாக்கர் போட்டிகளில் பங்கேற்றனர். மேற்காண் போட்டிகளின் நடுவர்களாக இசை அமைப்பாளர் டாக்டர் சாம் சுதாகர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் முனைவர் . சீதளாதேவி , இயக்குநர் மற்றும் ஓவியக்கவிஞர் வீரமணி உட்பட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களும் பங்கு பெற்று நடுநிலையான முடிவினை அளித்துள்ளார்கள். போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணாக்கர்களுக்கும் பாராட்டுச் சான்றும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச்சான்றும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பயணப்படியும், நடுவர்களுக்கான மதிப்பூதியமும் போட்டி நாளன்றே முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்டது.. அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்றோர் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் , நடுவர்களுக்கும் மதிய உணவு வழங்கி போட்டிகள் நிைறவுபெற்றன.