தூத்துக்குடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கி 1972ல் எம்ஜிஆர் அண்ணா உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டு மக்களுக்காக அவர் மறையும் காலம் வரை எம்ஜிஆர் பணியாற்றினார்.
அவர் மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்ஜிஆர் வழியில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு ராணுவ கட்டுப்பாடுடன் கட்சியை வழிநடத்தி தனி முத்திரை பதித்து மறைந்தார்.
பின்னர் 3ம் தலைமுறையாக எடப்பாடி பழனிச்சாமி 4 ½ ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக பணியாற்றி அதிமுக பொதுச்செயலாளராக கட்சியை வழிநடத்தி வரும் நிலையில், அவரது உத்திரவிற்கிணங்க அதிமுக 54-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாநில வர்த்தகஅணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் டூவிபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினார். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் மில்லை ராஜா, தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், தெற்கு மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் சேகர், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ஜோதிமணி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், துணைத்தலைவர் ரத்தினம், மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் சண்முகத்தாய், மற்றும் ஜோசப், சங்கர், அபுதாகீர், கோட்டளமுத்து, ராஜசேகர், டெலஸ்பர், மாரியப்பன், சந்திரா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.