
தீபாவளி என்பது இந்தியாவில் மிகப்பெரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்நாளில் இருள் நீங்கி ஒளி வெல்வதைக் குறிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படகலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களுக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்கள் அனைவருக்கும் 26 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் 5கிலோ, அரிசி பை, ஹாட் பாக்ஸ், ரவை, மைதா, பட்டாசு, சீனி, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, மசாலா வகைகள், தேங்காய், கடலைமிட்டாய் உள்பட 26 வகையான பொருட்கள் பிரஸ் கிளப்பில் வைத்து உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச்செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாரிராஜா, இருதயராஜ், முத்துராமன், ராஜன், லெட்சுமணன், சட்ட ஆலோசகர்கள் சரவணன், சாமிநாதன், உறுப்பினர்கள் முரளி கணேஷ், மாணிக்கம், மாரிமுத்து, நீதிராஜன், ஜெயராம், கார்த்திகேயன், நடராஜன், அறிவழகன், இசக்கிராஜா, காதர்முகைதீன், சந்தனரமேஷ் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.