தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 82 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாநகரச் செயலாளர் முருக பூபதி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், மாநில தீர்மான குழு உறுப்பினர் பேச்சிராஜ், மாநில எம்எல்எப் பொருளாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்; மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஆண்டாள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவண பெருமாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பொம்மு துரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், எம்எல்எப் திட்ட தலைவர் காசிராஜன், பொன்ராஜ், வேம்பு, பொய்யாளி, ஜெபக்குமார், கணேஷ் ராஜன், தொம்மை, முருகேசன் செந்தாமரைக்கண்ணன், பால்ராஜ், பெருமாள் சாமி, குமார் மனோகரன், பாலா, கணேஷ் மற்றும் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம!!!