Thursday, 24 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள் அழிந்து போவார்கள் கோவில்பட்டியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேச்சு

Last updated: September 21, 2026 10:18 am
Tamilagapuratchi
Share
SHARE

L  தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் எம்.ஜி.ஆர் திடலில் நடைபெற்றது. இதில் அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி. சண்முகநாதன் பேசுகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு என்னை பொறுப்பாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடம்பூர் ராஜு 15 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக அமைச்சராக இருந்து பதவி சுகம் அனுபவித்துவிட்டு ஓடி உள்ளார். கோவில்பட்டியில் தொடர்ந்து மூன்று முறை அவரை வெற்றி பெற செய்த மக்களுக்கும், அவரது வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கும், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோருக்கும் துரோகம் செய்துவிட்டு தனது சுயநலத்திற்காக சென்றுள்ளார். கழகத்திற்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள் தான் அழிந்து போவார்கள், இத்துடன் துரோகிகளின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது, இந்த இயக்கம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்டு தற்போது எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் வலுவாக உள்ளது, தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவிற்கு என்றும் அழிவே கிடையாது. .த.வெ.க. அரசு தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கவில்லை இது மைனாரிட்டி அரசுதான். 108 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஒவ்வொரு தலைவர் வீட்டிற்காக சென்று பிச்சை எடுத்து தான் அரசு நடந்து கொண்டு இருக்கிறது. மந்திரி பதவி கொடுத்ததும் திமுகவில் இருந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக சென்று விட்டன. கடந்த கால அதிமுக அரசின் சாதனைகளை எல்லாம் மறந்துவிட்டு, அதிமுக என்ற மாபெரும் இயக்கம் பற்றி தெரியாமல் இன்று தமிழக முதல்வர் எழுதி கொடுத்தை பேசுகிறார். அவரின் இந்த ஆணவ பேச்சுக்கு வரும் தேர்தல்களில் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள். இன்று இந்த ரீல்ஸ் ஆட்சியின் உண்மை முகத்தை மக்கள் இந்த 100 நாட்களில் புரிந்து கொண்டணர். தொழில் முதலீடை ஈா்ப்பதற்காக லண்டன் சென்று ரூ.15,000 கோடியில் முதலீடு வந்ததாக கூறுகின்றனர். ஏற்கனவே இந்தியாவில் தமிழகத்தில் தொழில் செய்து கொண்டிருப்பவர்களை, லண்டனுக்கு வரவைத்து தமிழக முதல்வர் அங்கே வைத்து தொழில் ஒப்பந்தத்தில் கையெழுத்துயிடுகிறார். இதை இங்கே உள்ள தலைமைச் செயலகத்திலே செய்து இருக்கலாம், இதற்கு 40கோடி முதல் 50கோடி வரை செலவாகி உள்ளதாக கூறுகின்றனர். உலகத்தில் காஸ்ட்லியான ஹோட்டலில் முதல்வர் விஜய், அவரது டிரைவர் மற்றும் அவரது கூட்டாளிகள், நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் என எல்லோரும் அங்க போய் அரசு பணத்தில் இன்பச் சுற்றுலா சென்று அரசு பணத்தை வீணடித்துள்ளனர். நடிகர் அஜித் அழைக்காமலே கார் பந்தயத்திற்கு சென்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதற்கு முன்பு நடந்த கார் பந்தயங்களில் இரண்டு முதல் ஐந்து இடங்களுக்குள் அஜித் வருவார். ஆனால் முதல்வர் விஜய் தொடங்கி வைத்த பந்தயத்தில் 38வது இடத்திற்கு அஜித் சென்று உள்ளார். விஜய்யை விட சினிமாவில் அதிக செல்வாக்கு உள்ள நடிகர் அஜித். தன்னுடைய பலம் தெரியாமல் தன்னையே அழித்துக் கொண்டு விஜய்க்கு வால்பிடித்து கொண்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படம் வெளியானது. அப்போது இந்த அமைச்சர்களை போல் யாரும் தியேட்டருக்கு சென்று அழுது புலம்பவில்லை. ஜனநாயகம் படம் ரிலீஸ் ஆனதும் சட்டமன்றத்திற்கே விடுமுறை விட்டு விட்டனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களில் போய் திரைப்படம் பார்த்துக் அழுது ரீல்ஸ் செய்கின்றனர். ஆனால் அந்த படம் இரண்டே நாள்தான் ஓடி இருக்கு. எங்கே போனது என்று தெரியவில்லை. திரைத்துறையில் செல்வாக்கினை இழந்த நிலையில் தான் அரசியலுக்கு முதல்வர் விஜய் வந்துள்ளார். தமிழகத்தில் உள்ள தற்குறிகள் எல்லாம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, என அனைவரையும் வற்புறுத்தி வாக்களிக்க வைத்து தான் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது. வருடத்திற்கு ரூ.250 கோடி சம்பளத்தை விட்டு விட்டு மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்ததாக கூறுகின்றனர். ஆனால் இவர் தமிழக மக்களை காப்பாற்ற வரவில்லை. அரசு நிர்ணயம் செய்த ரூ100 திரைப்பட டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்று அதில் வந்தது தான் 250 கோடி. இப்படி வந்த இவருக்கு தற்போது 2500 கோடி ரூபாய் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும்.ஊழலை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு எல்லா இடத்திலும் பேரம் பேசுகின்ற நிலை தான் இன்றைக்கு தமிழகத்தில் நடக்கிறது. எந்த வேலையும் நடைபெறவில்லை. கடந்த கால ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகள் தான் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த வேலைகளுக்கு பில் முறையாக வருவதில்லை, கடந்த ஆட்சியில் டெண்டர் விட்ட பணிகளை ரத்து செய்துள்ளனர். காரணம் ஆளும் கட்சியினர் கமிஷன் வாங்குவதற்காக தான்,நேர்மையான அரசு நடத்தினால் டெண்டர் விட்ட பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை தான் பார்க்கவேண்டும். அதற்கு பதிலாக அனைத்து டெண்டர்களையும் ரத்து பண்ண காரணம் என்ன,இந்த ஆட்சியில் லஞ்சம் ஊழல் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களுக்குள் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர். ஆனால் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாத காலத்தில் அரிசி, பருப்பு விலை, மின்சார கட்டணம் என அனைத்தும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுதான் இந்த தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை, இன்று மாற்று கட்சியில் இருந்து ஆளுங்கட்சிக்கு வந்த அனைவரையும் சேர்த்து வைத்துள்ள தவெக தூய சக்தியா? இன்று தீயசக்திகள் எல்லாம் தமிழக வெற்றி கழகத்தில் தான் இருக்கின்றனர்.தீய சக்திகள் எல்லாம் வெளியேறி இன்று அதிமுக எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தூய சக்தியாக உண்மையான கழக தொண்டர்களை கொண்ட இயக்கமாக மாறி உள்ளது. எனவே நடைபெற உள்ள இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் நான்கரை ஆண்டு காலம் எடப்பாடி கே.பழனிசாமி நல்லாட்சியையும், கடந்த கால விடியா திமுக ஆட்சியையும், இந்த மூன்று மாத கால ரீல்ஸ் ஆட்சியையும் மக்கள் எண்ணி பார்த்து வாக்களிக்க வேண்டும். ஜெ ஆட்சிக் காலத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் ஒரு பவுன் தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கினார்கள். அந்த திட்டத்தை பெயர் மாற்றி தாய்மாமன் சீர் என்று இன்று அரைகிராம் தங்கம் கொடுக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். எல்லா திட்டங்களுக்கும் பெயரை மாற்றி வைக்கின்றனர். சொந்த மூளையில் இந்த ஆட்சி நடக்கவில்லை அதிகாரிகளின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் தமிழகம் கேள்விக்குறியான நிலைக்கு போய்விடும். தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரீல்ஸ் ஆட்சியில் யாருக்கும் எந்த நன்மை கிடைக்கவில்லை. இன்றைக்கு பொதுமக்களும், அரசு துறையினரும்,மக்களும் இந்த ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதத்திலேயே அரசுக்கு எதிராக போராட தொடங்கிவிட்டனர். இன்றைக்கும் தமிழகத்தில் பெரிய கட்சி என்றால் அது அதிமுக தான்.திமுக முடிந்து போன கதை, திமுகவிடமிருந்து கூட்டணி கட்சிகள் வெளியேறிய நிலையில் தனி மரமாக இருக்கிறது. தமிழகத்தில் 6 கோடிக்கும் மேல் வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் 65% பேர் த.வெ.க வை எதிர்த்து தான் வாக்களித்துள்ளனர்.ரீல்ஸ் போட்டு விஜய் ஒரு மாயெயை உருவாக்கி இன்று முதல்வர் ஆகியுள்ளார்.இது போன்ற தவறுகள் இனி நடைபெறாமல் இருக்க கழக ஐ.டி.விங் மற்றும் அதிமுகவினர் உங்கள் பகுதியில் ஆளும் கட்சியினர் பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு தக்க பதிலடி கொடுங்கள்.இந்த ஆட்சியின் அவலங்களை நீங்களும் ரிலீஸ்களாக எடுத்து வெளியிடுங்கள்,இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை இளைஞர்கள், பொதுமக்களிடம் தான் இருக்கிறது, இனியும் ரீல்ஸை நம்பி ஏமாற வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பேசினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கே.வி.கே சாமி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து கீதாஜீவன் மாியாதை
Next Article தூத்துக்குடி பொதுமக்களின் விருப்பதிற்கேற்ப மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

30 வருடமாக பாதிப்பு மூன்று மாதம் அவதி 3 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது, மேயர் ஜெகன் பெரியசாமி பேட்டி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பி அண் டி காலணி பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி மரக்கன்றுகள் நட்டினாா்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?