Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி குடிநீர் பிரச்சனையில் அமைச்சர் மவுனம் ஏன்? மக்களை சந்திக்காமல் தப்பிக்கும் அமைச்சருக்கு பா.ஜ., பொதுச்செயலாளர் ராஜேஷ் கண்டனம்

Last updated: August 12, 2026 1:23 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்து, பொதுமக்கள் குடிநீருக்காக திண்டாடி வரும் நிலையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் எங்கே இருக்கிறார்? மக்களின் அடிப்படை பிரச்னையை தீர்க்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

 

தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்கும் பகுதியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக குடிநீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நேரத்தில், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் பிரச்னையை சமாளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தொகுதி மக்களின் பிரதிநிதியாகவும் அமைச்சராகவும் இருக்கும் ஸ்ரீநாத் இதுவரை என்ன செய்தார் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து அமைச்சர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினாரா? குடிநீர் வரத்து பாதிப்புக்கான காரணத்தை நேரில் ஆய்வு செய்தாரா? மாற்று குடிநீர் ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டாரா? பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்திட்டம் வகுத்தாரா? என்பதற்கு அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். தூத்துக்குடி மாநகரம் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரிகளை ஒருங்கிணைத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய அமைச்சர் மவுனமாக இருப்பது ஏன்?. ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேலாகியும் தூத்துக்குடி மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து அமைச்சர் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் மத்தியில் ஏற்கனவே எழுந்துள்ளது. மேலும், தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்னையை அரசியல் அறிக்கைகளுக்குள் முடித்துவிடாமல், அமைச்சர் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். மாநகராட்சி ஆணையர், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து அவசர கூட்டம் நடத்தி, குடிநீர் விநியோகத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும். “மக்கள் தண்ணீருக்காக தவிக்கும் போது அமைச்சர் மவுனமாக இருக்க முடியாது. பதவி என்பது அதிகாரத்தை அனுபவிப்பதற்காக அல்ல; மக்களின் பிரச்னையை தீர்ப்பதற்காக. தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என ராஜேஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Next Article 5 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற துடிக்கும் தவெக அரசுக்கு காயல் அப்பாஸ் கண்டனம்

You Might Also Like

தூத்துக்குடி

முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தவெக அன்று எதிா்ப்பு இன்று ஆதரவு, உப்பு தொழிலை அழிக்க இரண்டு கையால் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்”- நாடா்கள் கூட்டமைப்பு கடும் தாக்கு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 20வது வாா்டு ரவீந்திரன் மலா் தூவி இனிப்பு வழங்கினாா்.

By Tamilagapuratchi
தூத்துக்குடி

முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?