தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற 12ம்வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று 50சதவீதத்துக்கு கீழ் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பெறாத மாணவர்களுக்கு தொழில் சார்ந்த வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சி வின்பாஸ்ட், ஸ்பிக், ஜேஎஸ்டபிள்யு, வஉசி துறைமுகம், டிசிடபிள்யு ஆகிய தொழில் நிறுவன அதிகாரிகளுடன் கலெக்டா் விஷு மகாஜன் தலைமையில் உயர் கல்வி வழிகாட்டல் கூட்டத்தில் பல் தொழில்நுட்பம், தொழிலக பயிற்சி நிறுவனங்களில் மாணவர்களின் சேர்க்கையையும் உறுதிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலெக்டா் விஷுமகாஜன் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் தூத்துக்குடியில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களில் எத்தகைய திறன்கள் மற்றும் தகுதிகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து இந்நிறுவனங்களில் பயிற்சி தரப்படுகிறது. பணியுடன் கலந்த கற்றல் திட்டங்களை பற்றியும், முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களோடு இணைந்து மாணவர்கள் பயிலும் பொழுதே உதவித்தொகை பெறுவதையும். பின்பு மாணவர்கள் பல் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தொழிலக பயிற்சி நிறுவன அத்தியாவசிய தேவைகளையும், வருங்காலங்களில் அதனுடைய பயன்பாட்டுகளையும் பற்றியும் முன்னணி தொழில் நிறுவனங்களில் இருந்து வருகை புரிந்த சிறப்பு வல்லுநர்கள் தொழில் நிறுவனங்களில் இணையும் முன் எவ்விதமான தகுதிகள் மற்றும் திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும். வருங்காலங்களில் துறைமுகம் சார்ந்ததாகவோ, ரசாயனம் சார்ந்ததாகவோ, இயந்திர உதிரி பாகங்கள் தயாரிப்பு சார்ந்ததாகவோ, மின் உற்பத்தி சார்ந்ததாகவோ வளர்ந்து வரும். இவ்வேளையில் மாணவர்கள் கல்வியுடன் கூடிய தொழில் பயிற்சிகளை மேற்கொண்டு, எல்லா வளங்களிலும் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும், பல் தொழில்நுட்ப நிறுவன முதல்வர், தொழிலக பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் தங்கள் நிறுவனங்களில் வழங்கக்கூடிய கல்விகளையும், பயிலும்போதே கிடைக்கும் உதவித்தொகைகளை பற்றியும், தரம் உயர்த்தப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் களப்பயணம் மூலமாக தொழில் துறைகளில் பங்கு பெறுதல், இயந்திரங்களை கையாளுவதில் உள்ள பலன்கள், வருங்காலங்களில் தொழில்நுட்பத் துறையை சிறந்தது என்று கலெக்டா் எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, துணைஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள், உயர்வுக்கு படி ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட ஆட்சியரக மேலாண்மை குழுக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.