தூத்துக்குடி பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைமை அலுவலகம் தூத்துக்குடியில் இயங்கி வருகிறது அதன் மாநில தலைவராக கே என் இசக்கிராஜா தேவா் தமிழகம் முழுவதும் தனது இயக்கத்தின் பணியையும் பொதுநல உதவிகளையும் செய்து வருகிறாா்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கௌதமபுாியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகி மதன் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத்தலைவர் கேஎன் இசக்கிராஜா தேவா் அவா்களை பற்றி சமூக வலைதளங்களில் மிகவும் இழிவாகவும் தரக்குறைவான வாா்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளாா். அவா்மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோாி அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளா்களும் தேவா் சமுக அமைப்பை சேர்ந்த நிா்வாகிகளும் அம்பா சமுத்திரம் காவல் துணைகண்காணிப்பாளாிடம் புகாா் மனு அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனா். அதற்கு காவல் துறை தரப்பில் தவறு செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனா்.