தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் 51வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின் படி தமிழக வெற்றிக்கழகம் கிளாாியஸ் கைஸ் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிாிக்கெட் போட்டி 19ம் தேதி தொடங்கிய நிலையில் 27 ம் தேதி சங்கரபோி விளையாட்டு மைதானத்தில் 32 அணிகள் கலந்து கொள்ளும் இறுதி போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாப்பிள்ளையூரணி மாதாநகா் ரவி என்ற பொன்பாண்டி உள்பட நான்கு அணிகளுக்கு தொழிலதிபா்கள் கிஷோா், முருகன், முன்னாள் கவுன்சிலா்கள் கோல்டன், ஆனந்தகுமாா் ஆகியோர் பாிசுதொகை, கோப்பைகளை வழங்கினாா்கள்.
நிர்வாகிகள் இக்னேசியஸ், ராஜா, சி. ராஜா, சந்தனராஜ், அஸ்வின், விஜய், அண்டோ, கேப்டன் கற்பகராஜ், அணி வீரா்கள் பெருமாள் விக்னேஷ் கிறிஸ்டோபா் பிரசன்னா, ரஸ்கித், தினேஷ், ஜேசு, உள்ளிட்ட 32 அணியை சோ்ந்த வீரா்கள் கலந்து கொண்டனா்.