===============
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி. பழனிச்சாமி தூத்துக்குடி வருகையை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2026 ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்லையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி. பழனிச்சாமி தமிழகம் முழுவதும் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற உன்னத நோக்கத்தை கொண்டு லட்சிய பயனத்தை மேற்கொண்டு சுற்றுப்பயணம் செய்து வருகிறாா்.
அதன் 2 ம் கட்ட சுற்றுப்பயனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 31 ம் தேதி அடுத்த மாதம் 1, 2 ஆகிய 3 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறாா். அவரது வருகையையொட்டி மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளிப்பது குறித்து வர்த்தக அணி சாா்பில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி நீதிமன்றம் எதிரே உள்ள கைலாஷ் திருமண மஹாலில் வரும் 19 ம் தேதி சனிக்கிழமை மாலை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதில் தலைமை கழக மாவட்ட சாா்பு அணிகள், ஒன்றிய, நகர பேரூர் கிளைக்கழகம், வட்டக்கழகம், தொழிற்சங்கம், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி உறுப்பினா்கள் உள்பட அதிமுக அனுதாபிகள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.