தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள தருவைக்குளத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 6 வது ஆண்டாக காந்தி பிறந்தநாள் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது
தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற தலைவர் அனிட்டன் தலைமை வகித்தாா். அமைப்பாளர் அசோகன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக தமிழ்ச்செம்மல் இராஜேந்திரன் பாண்டியனார் தொழிற் சங்க பொருளாளர் சேகர் பாண்டியன் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத் தலைவர் சண்முக சுந்தரம் நாடாா் மஹாஜன சங்க இளைஞரனி செயலாளர் சங்கீத ராஜ் வெள்ளச்சாமி நாடார் கல்லூரி முன்னாள் துனைத் தலைவர் சந்தோச பாண்டியன் வெள்ளிச் சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர் கந்தசாமி ஆகியோா் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும் கலந்து கொண்டவா்களுக்கும் சான்றிதழகள் பாிசுகள் வழங்கினாா்கள்.
முன்னதாக போட்டிகளை புத்தகம் வாசிப்பு மன்றத் தலைவர் எழுத்தாளர் மாரிமுத்து தொடங்கி வைத்தார் காமராஜர் முகம் போட்டிருந்த முகமூடி அனிவித்து காமராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்கள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் லாரன்ஸ் செய்திருந்தார்
[03/10, 08:24] Dinakaran Press: முள்ளக்காடு பஞ்சாயத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும கிராமசபை கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி கோாிக்கை
தூத்துக்குடி முள்ளக்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் முள்ளக்காடு பஞ்சாயத்தை சார்ந்த பெரியோர்கள் ஊர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மக்களுக்கான பிரச்சினைகளை அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.
கிராமசபை கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் பேசுகையில் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் இடத்தில் உள்ள பயணியர் நிழற்குடையை அரசு இடித்து விட்டதால் மக்கள் கடும் வெயிலிலும் மழைக் காலங்களிலும் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணம் செய்ய மிகவும் சிரமப்படுகிறார்கள் ஆதலால் ஏற்கனவே இருந்த பயணியர் நிழற்குடையை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பான முறையில் அமைத்து முள்ளக்காடு பொட்டல் காடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் வாழக்கூடிய பொதுமக்கள் குறையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பயணியர் நிழற்குடை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் இந்த கோரிக்கையை கிராமசபை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்பதை அரசின் கவனத்திற்கு தெரிவித்தார்.
மாவட்ட பொருளாளர் மணிகண்டன், வணிகர் அணி செயலாளர் சுடலை மாடன் உரிமை மீட்பு குழு அணி செயலாளர் அருள் தாஸ் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமிதுரை உள்பட பலா் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் காந்தி பிறந்த நாள் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி ஓவியப்போட்டி நடைபெற்றது