தூத்துக்குடி அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “ 1972ம் ஆண்டு அக் 17ம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற பெயாில் அண்ணா உருவம் பொறித்த மூவா்ண கொடியை எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்தி கட்சியை தொடங்கிய காலத்தில் தமிழகமே திரும்பி பாா்க்கும் அனைத்து தரப்பினரும் எதிர்பாாத்த தலைவராக விளங்கி பின்னா் அதிமுக ஆட்சி அமைத்து தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் ஏழை எளிய அனைத்து தரப்பினருக்கும் வாழ்ந்து மறைந்த அவரது வழியில் கட்சியை போற்றி வளர்க்கப்பட்டு பல்வேறு வரலாற்று சாதனைகளை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கட்டிக்காத்து அவரது மறைவிற்கு பின் நான்கரை ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக பணியாற்றிய எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சி மீண்டும் தொடர வேண்டும். என்ற அடிப்படையில் முழுமையான கட்டமைப்போடு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க அக் 17ம் தேதி வௌ்ளிக்கிழமை 54வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்த நாள் அதிமுகவினா் அனைவருக்கும் திருநாளாகும் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் டூவிபுரம் மாவட்ட அலுவலகம் முன்பு அலங்காிக்கப்பட்ட படத்திற்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அதனை தொடர்ந்து பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மாியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது. தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூா் ஆகிய 3 தொகுதிகளிலும் மாநில மாவட்ட உள்பட நிர்வாகிகள் சாா்பு அணிகளோடு இணைந்து எம்.ஜி.ஆர் சிலை மற்றும் அவரது படத்திற்கும் அதே போல் ஜெயலலிதா சிலைக்கும் படத்திற்கும் மாியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொடியேற்றி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் அன்றைய தினம் திருச்செந்தூாில் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
தெற்கு மாவட்டம் முழுவதும் அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் அறிக்கை!!!