தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் முரட்டு பக்தனாக இருந்து 30 ஆண்டுகள் வரை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக பணியாற்றி 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை நகர்மன்ற தலைவராகவும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் துறைமுக சபை பொறுப்பு குழு உறுப்பினராகவும் தொழிற்சங்க மேதையாக வலம் வந்த பெரியசாமி 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆசிரியராக இருந்த கீதாஜீவனை மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட களம் இறக்கினார்.
அதில் வெற்றி கண்ட பின் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய காலத்தில் சிறந்த மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்போதைய பிரதமரிடம் விருதை பெற்றுக் கொண்டார். அதன்பின் 2006 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கலைஞர் அமைச்சரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சராக பணியாற்றினார். 2016-ல் இதே தொகுதியில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றினார். அதன்பின் அவரது தந்தை மறைந்த பின் தொடர்ந்து 8 ஆண்டுகளாக வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வரும் நிலையில் 2021-ல் மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மீண்டும் 2வது முறையாக அதே துறையின் அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். பொது வாழ்வில் 29 ஆண்டுகள் களம் கண்டு தந்தையின் வழியில் தலைமை கழகம் உத்தரவிடும் அனைத்து பணிகளையும் முரட்டு பக்தன் பெரியசாமி செய்வதை போல் சிறப்பான முறையில் செய்து வருகிறார். திமுக எதிர்கட்சியாக இருந்த போது மு.க.ஸ்டாலின் சென்னை விழாவில் முரட்டு பக்தனின் மகள் கீதாஜீவன் பெண் சிங்கமாக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் ஒரே பெண் மாவட்ட செயலாளராக இருக்கிறார் என்று புகழாரம் சூட்டினார். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் எட்டையாபுரம் சாலையில் முரட்டு பக்தன் காலத்தில் கட்டிய கலைஞர் அரங்கம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக பெண் சிங்கம் பணி பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்று புகழாரம் சூட்டினார். இதுகுறித்து பெண் ஒருவர் கூறுகையில் நான் கடந்த காலங்களில் எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்தவள். கீதாஜீவன் 2006-ல் அமைச்சராக இருந்த பொழுது ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தேன். நிறைவேறுமா என்ற நம்பிக்கையில் இருந்த எனக்கு அவரது உதவியாளர் மூலம் தொடர்பு கொண்டு அமைச்சர் உங்களை அழைக்கிறார் என்றனர். சென்ற போது எனது கோரிக்கையில் நிறைவேற்றி கொடுத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை நான் திமுக-வின் விசுவாசியாக மாறிவிட்டேன். காரணம் பணம் எல்லோரிடமும் இருக்கலாம். கொடுப்பதற்கு மனமும் உபசரிப்பு செய்வதற்கு உள்ளமும் அவர்களிடம் உள்ளது. ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு பணியாற்றக் கூடிய பெரியசாமியின் வழியில் அமைச்சர் கீதாஜீவன் பணியாற்றுவது இந்த மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற மிகப் பெரிய வரப் பிரசாதமாகும் என்றார். திமுக ஆட்சி இல்லாத காலத்திலும் உதவி என்று கேட்டு செல்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் மழை காலங்களிலும் கொரோனா காலங்களிலும் எல்லா தரப்பினருக்கும் உதவிகள் செய்து மிகப் பெரிய சமத்துவத்தை உருவாக்கி வைத்துள்ளார். எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் பலருடைய இல்லங்களிலும் உள்ளங்களிலும் உதயசூரியனை உதிக்க செய்து தலைமை கழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் கீதாஜீவனுக்கு துணையாக அவரது கணவர் ஜீவன் ஜேக்கப் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். திமுக-வில் இருப்பதே பெருமை தான். அதிலும் சாதனை படைத்த சரித்திரமாக அமைச்சர் கீதாஜீவன் செயல்பட்டு வருகிறார்.