தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியாா் உத்தரவிற்கிணங்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அண்ணா பிறந்தநாளை யொட்டி 3 தொகுதிகளிலும் உள்ள வாக்குசாவடி முகவா்கள் கூட்டத்தில் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும். பிஜேபி அரசு நமக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வருகிறது அவா்களோடு எடப்பாடியும் தற்போது விஜயயும் நம்மை எதிர்த்து கொண்டு செயல்படுகிறாா்கள்.

அது ஓரு நாளும் ஈடேறாத திட்டமாகத்தான் இருக்கும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தினந்தோறும் திட்டமிட்டு பணியாற்றுகிறாா். மக்கள் நம்பக்கம் தான் இருக்கிறாா்கள் தமிழகத்தில் எங்கேயாவது ஓரு இடத்தில் சமுதாய மக்கள் பணி விஜய் செய்ததுண்டா, அன்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில் 242 இடங்களில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி கூடுதலாக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கும் தமிழகத்திற்கான அனைத்து திட்டங்களும் நிதி ஓதுக்கீடுகளும் முழுமையாக கிடைத்திருக்கும் எந்த தடை பிஜேபி அரசு போட்டாளும் அதை யெல்லாம் உடைத்து 2026 தோ்தலில் மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் அாியனையில் அமருவாா். அதற்கு அனைவரும் சபதம் ஏற்று பணியாற்ற வேண்டும். என்றுபேசினாா். கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயக்குமாா் ரூபன், ஆறுமுக பெருமாள், பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, பொதுக்குழு உறுப்பினர்கள் சொா்ணகுமாா், முத்துச்செல்வன், இந்திராகாசி, சாகுல்ஹமீது, ஆறுமுகபாண்டியன், ராஜலட்சுமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், சுரேஷ், வீரபாகு, செல்வபெருமாள், செல்வகுமாா், ரகுராமன், சாரதா பொன்இசக்கி, தயாநிதி பாண்டியன், ராமசாமி, ரெங்கநாதன் என்ற சுகு போின்ப ராஜ் லாசரஸ், ரவி என்ற பொண்பாண்டி, ஆனந்த், சுரேஷ்குமாா், அணி துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின், அந்தோணிதனுஷ்பாலன், ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், இளையராஜா, சரவணக்குமாா், ராமசாமி, சுரேஷ்காந்தி, கொம்பையா, இளங்கோ, ரவி, ஜோசப், பாா்த்திபன், கோட்டாளம், கொம்பையா, சதீஸ், பாலசிங், ரமேஷ், பகுதி செயலாளா்கள் சிவக்குமாா், ஆஸ்கா், பேரூா் செயலாளா்கள் இளங்கோ, ராயப்பன், சுப்புராஜ், நவநீத முத்துக்குமாா், கண்ணன், கோபிநாத், ராமஜெயம், முத்துவீரபெருமாள், ஜமீன்சாலமோன், மால்ராஜேஷ், முருகானந்தம், நவநீதபாண்டியன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதி பூபேஸ்நாதன், ஓன்றிய துணைச்செயலாளர்கள் நாராயணன், ஹாிபாலகிருஷ்ணன், சண்முகராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் பொன்னரசு, மற்றும் கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன், பாரதிராஜா, கப்பிகுளம் பாபு, உள்பட பல்வேறு அணியை சோ்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச்செயலாளர் ஜெபத்தங்கம் பிரேமா நன்றியுரையாற்றினாா். நடிகா் விஜய் கட்சியில் கட்டுப்பாடு, கண்ணியம் இல்லை. தலைமை கட்டுப்பாட்டோடு கூட்டத்தை நடத்த வேண்டும் விரைவில் கற்று கொள்வார்கள் அமைச்சர் கீதாஜீவன் பேட்டி தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஓன்றிய பாஜக அரசாக இருந்தாலும் சரி, தமிழகத்தை ஆண்ட கட்சியான அதிமுகவாக இருந்தாலும் சரி அவர்கள் என்ன வாக்குறுதி நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று எடுத்துப் பார்க்க வேண்டும். ஆனால் முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி நெருக்கடி இருந்த போதிலும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் செய்து வருகிறார். சொல்லாததையும் கூட செய்து வருகின்றோம். புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் ஆகியவை தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்படவில்லை. ஆனால் திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக குற்றம் சுமத்துவாா்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செய்த பல்வேறு சாதனை திட்டத்தின் மூலம் தொழில், பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று பலன் அடைந்து வருகின்றார்கள். நிச்சயமாக மக்கள் ஆதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் 2026ல் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்கும் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்று பணியாற்றுவாா். தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் வருகின்ற இடம் எல்லாம் கூட்டம் இருந்தது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? விஜய் கட்சியில் கட்டுப்பாடு, கண்ணியம் இல்லை. தலைமை கட்டுப்பாட்டோடு கூட்டத்தை நடத்த வேண்டும்.. வரையறை இல்லாமல் இருக்கிறது.. அவர்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. விரைவில் கற்று கொள்வார்கள் திமுகவில் கடமை கண்ணியம் கட்டுபாடு கொள்கை கோட்பாடுகளை இன்று வரை கடைபிடித்து வருகின்றோம். ஓரணியில் தமிழ்நாடு என்ற நடைமுறையை ஒவ்வொரு வீடாக சென்று உறுப்பினர்் சோ்க்கையை சேர்த்துள்ளோம் அதற்கு பொதுமக்கள் நல்ல ஆதரவை கொடுத்துள்ளனா். நாளைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியபடி தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியை பாகமுகவா்கள் கூட்டத்தில் எடுத்து கொள்ள உள்ளனா். அதனை தொடர்ந்து அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் தமிழன் தலைநிமிர்ந்து நடப்பதற்கு முதலமைச்சர் தான் காரணம் என்று கூறினாா். மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளா் பிரபு, மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், ஆகியோர் உடனிருந்தனா். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு மக்கள் நலன் செய்ய வேண்டும் என இப்போதுதான் அறிவு வந்ததா அவர் சம்பாதித்த பணத்தில் மக்கள் நலன் ஏதாவது செய்திருக்கிறாரா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி? தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள் அது மட்டுமல்லாமல் நாளை அண்ணா பிறந்த நாளை ஒட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் உறுதிமொழி ஏற்கக்கூடிய நிகழ்வு நடைபெற உள்ளது. தவெக விஜய் திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் வாக்குறுதி என்பது மக்களுக்கு பல்வேறு வகையில் நன்மை செய்ய வேண்டும் எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்யலாமென வாக்குறுதி கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக இந்த நிதியை கொடுத்தால் வாக்குறுதி நிறைவேற்றி விடுவார்கள் என ஒன்றிய அரசாங்கம் தமிழகத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அளவிற்கு எந்த வகையில் நிதியாதாரங்களை கொடுக்க முடியாமல் தடை செய்கின்ற வகையில் செய்கிறார்களோ அதை விஜய் புரிந்து பேசுகிறாரா இல்லையா என தெரியவில்லை விஜய் கேட்கின்றார் என்று சொன்னால் விஜய் இதுவரை இந்த தமிழகத்தின் மக்களுக்கு தமிழ்நாட்டுடைய இளைஞர்களுக்கு தமிழ்நாட்டின் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களுக்கு எவர்களுக்காவது எந்த உதவியாவது செய்திருக்கிறாரா என்பதை சிந்தித்து பாா்க்க வேண்டும். விஜய் நடிகராக இருக்கும் போது 200 முதல் 300 கோடி ரூபாய் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகின்ற நடிகர் எந்த நன்மையாவது மக்களுக்காக செய்திருக்கிறாரா இல்லை. எதுவும் செய்யாமல் கேள்வி கேட்பது எளிது. முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் செய்வதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஓன்றிய பாஜக அரசு எத்தனை இடைஞ்சல்கள் செய்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் 2000 கோடி தரமுடியும் என்று ஓன்றிய அரசு மிரட்டுகிறது. இதையெல்லாம் கடந்து தான் மக்களை நம்பி தான் நாங்களும் எங்கள் இயக்கமும் இருக்கிறது மக்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவார்கள் மேலும் யார் கட்சியை ஆரம்பித்தாலும் திமுகவை தான் பற்றி பேசுவார்கள் ஏனென்றால் திமுக தான் மக்கள் மன்றத்தில் இருக்கக்கூடிய இயக்கம் மக்களை நேசிக்கக்கூடிய இயக்கம் திமுக இயக்கம் அதனால் தான் சாதாரணமான ஓருவா் கட்சி ஆரம்பித்தால் திமுகவை வீழ்த்தப் போகிறேன் என்கிறார்கள் திமுக பாரம்பரியமானது அண்ணாவின் காலத்தில் இருந்து தலைவர் கலைஞர் காலத்தில் இருந்து நம்முடைய முதலமைச்சர் தளபதியுடைய காலத்தில் இருந்து அத்தனையும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் சிறுபான்மை மக்கள்என ஒவ்வொருவருடைய உயர்வுக்காக இருக்கக்கூடிய இயக்கம் திமுக தான். திராவிட முன்னேற்றக் கழகம் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட தின் நோக்கமே என்னவென்று சொன்னால் எவரெல்லாம் அமுங்கி இருக்கின்றார்களோ எவரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் உயர்வு வரவேண்டும் என்ற வகையில் இருக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த கொம்பனாலும் தொட்டு பாா்கவோ அசைத்து பார்க்க முடியாது சினிமாவில் நடிப்பவர் கூட்டத்தை நடத்தலாம் எந்த வகையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைக்க முடியாது வெல்வோம் 2026ல் கழகத் தலைவர் தளபதியார் முதலமைச்சர் ஸ்டாலின் அமர வைப்போம் மேலும் எம்ஜிஆர் அண்ணாவோட இருந்தவர் கலைஞரோடு பொருளாராக இருந்தவர் மக்களோடு மக்களாக இருந்தவர் தான் சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கு வழங்கியவர் இவர் யார் விஜய் யார் இவர் என்ன செய்திருக்கிறார் என ஒன்றைச் சொல்லுங்கள் 200 கோடி 300 கோடி சம்பாதிக்கக்கூடிய நடிகர் விஜய் தூத்துக்குடிக்கு வரும் போது திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் மக்கள் திமுக பக்கம் தான் இருக்கிறார்கள். என்று ஆவேசத்துடன் கூறினாா்.